Saturday 20 September 2014


இறையூரில் புகழ் பெற்ற தாகம் தீர்த்த புரீஸ்வரர் கோவில் உள்ளது. இறையூர் கிராமமக்கள் இந்த கோவிலை சீரமைத்துள்ளனர். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 10/7/2011 காலை 9.30 மணி அளவில் நடக்கிறது. இதையொட்டி அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் அனுக்ஞை, விக்னேஸ்வரா பூஜையுடன் பூஜைகள் தொடங்கின. யாக சாலையில் சாமி, அம்மன், திருஞானசம்மந்ததிற்கு 15 பிரதான யாக குண் டங்களும், பரிவார தெய்வங்களுக்கு 10 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டுள் ளன. இவற்றை சுற்றி 274 கலசங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் தொடங்கின. முதல் கால பூஜை வரும் 7-ந் தேதி இரவும், மறுநாள் வெள்ளிக் கிழமை 2-ம் கால 3-ம் கால பூஜைகளும், 9-ந் தேதி 4-ம் கால 5-ம் கால பூஜைகளும் நடக்கின்றன, 10-ந் தேதி காலை 9.30 மணி அளவில் கும்பாபி ஷேகம் நடக்கிறது. விழாவில் சமூக நலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம், புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி

Friday 15 August 2014

ஊராட்சி மன்றத் தலைவர்

இறையூர் மக்கள்சார்பில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்திருமதி.செல்வமணி கந்தசாமி ஊராட்சி மன்றத் தலைவர்
இறையூர் ஊராட்சி மன்றத் தலைவிக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. புதுதில்லியில் இயங்கும் பாரதிய தலித் சாகித்ய அகாதெமி, ஆண்டு தோறும் சிறந்த சமூக ஆர்வலர்களைத் தேர்வு செய்து தேசிய விருதை வழங்கி வருகிறது.
இறையூர் ஊராட்சி மன்றத் தலைவிக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
புதுதில்லியில் இயங்கும் பாரதிய தலித் சாகித்ய அகாதெமி, ஆண்டு தோறும் சிறந்த சமூக ஆர்வலர்களைத் தேர்வு செய்து தேசிய விருதை வழங்கி வருகிறது.
இந்த அமைப்பு, கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே  இறையூர் ஊராட்சி மன்றத் தலைவி திருமதி.செல்வமணி கந்தசாமிக்கு தேசிய அளவில் பொது வாழ்வில் சிறந்த பெண்மணியாகத் தேர்வு செய்து, வீராங்கணை ஜெல்கரிபாய் தேசிய விருது வழங்கியுள்ளது. 
தென்னிந்தியாவில் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.http://eraiyur606111.blogspot.com
புதுதில்லியில் அண்மையில் நடந்த விழாவில் தலித் சாகித்ய அகாதெமியின் தேசியத் தலைவர் சுமன்க்ஷô இந்த விருதை செல்வமணி கந்தசாமியிடம் வழங்கினார். 
 விழாவில் மிஜோராம் மாநில முன்னாள் ஆளுநர் பத்மநாபன், முன்னாள் மத்திய அமைச்சர் சத்யநாராயண்ஜெய்டியா, பஞ்சாப் விதன் சபாவின் சபாநாயகர் சரண்ஜித்சிங்அட்வால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெமுனாதேவிபருப்பால், திரிபுரா மாநில கல்வி அமைச்சர் அனில்சர்க்கார் ஆகியோர்
பங்கேற்றனர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

சுதந்திர தினம் வாழ்த்துக்கள்