அன்னபூரணி உடனுறை தாகம் தீர்த்த புரீஸ்வரர்கோவில் கும்பாபிஷேகம்

http://eraiyur606111.blogspot.com

அன்னபூரணி உடனுறை தாகம் தீர்த்த புரீஸ்வரர்கோவில்இங்குகிளிக்செய்க 
 
 
              63 நாயன்மார்களை ஈசன் ஆட்கொண்ட அருள் வரலாறைக் கூறுவது பெரியபுராணம். இதில் திருஞான சம்பந்தரைப் பற்றிய வரலாறே மிக விரிவாக- சுமார் 1800 பாடல்களைக் கொண்டுள்ளது.
சீர்காழிக்கருகே தோன்றிய ஞானசம்பந்தர் மூன்று வயதிலேயே இறைவனால் ஞானப்பால் ஊட்டப்பெற்று, அவ்வயதிலிருந்தே சிவனைப் போற்றிப் பாடத் தொடங்கினார். தன் தந்தையின் தோள்மேல் அமர்ந்து பல்வேறு தலங்களுக்குச் சென்று அத்தல இறைவனைப் போற்றினார். கைகளால் தாளம் கொட்டிய வண்ணம் அவர் பதிகம் பாட, சம்பந்தரின் கை நோகுமே என்று ஈசன் பொன்னாலான தாளத்தை வழங்கினார்.
திருமருகலில் பாம்பு கடித்து இறந்த வணிகனை உயிர் பெறச் செய்தது, திருவீழி மிழலையில் படிக்காசு பெற்று பஞ்சத்தை ஒழித்தது, திருநீற்றுப் பதிகம் பாடி பாண்டிய னின் வெப்பு நோயை நீக்கியது, "வேந்தனும் ஓங்குக' என்று பாடி மன்னனின் கூன் நிமிரச் செய்தது, மயிலையில் பூம்பாவையை உயிர் பெறச் செய்தது என ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார் ஞானசம்பந்தர்.
பின்னர் சம்பந்தர் பருவ வயதை அடைந்த தும் அவருக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணினார் அவரது தந்தை.

ஆனால் சம்பந்தர், "இறைவனைப் பாடவே படைக்கப்பட்டேன்.  

 எனக்கு இல்லற வாழ்வு வேண்டாம்' என்று மறுத்துரைத்தார். ஆனால் தந்தையோ, "இறைவனுக்குத் தொண்டு செய்ய இல்லறம் ஒரு தடையல்ல' என்று பலவாறு எடுத்துரைத்தார்.

இறைசித்தம் இதுவென்று திருமணத்திற்குச் சம்மதித்தார். கொள்ளிடத்திற்கு அருகேயுள்ள ஆச்சாள்புரம் என்ற ஊரில் திருமண ஏற்பாடுகள் நடந்தன. உறவினர்கள், சிவனடியார்கள் உட்பட ஏராளமான மக்கள் சம்பந்தரின் திருமணத்தைக் காண திரண்டிருந்தனர்.

அப்போது சம்பந்தர், "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' என்று பாடியபடி யாகத் தீயைச் சுற்றி வந்தவர் ஒளிப்பிழம்பாக இறைவனுடன் கலந்துவிட்டார். கூடியிருந்த அனைவரும் இக்காட்சியைக் கண்டு- இறைவனின் திருவிளையாடலை அறிந்து மெய்சிலிர்த்து நின்றனர். இறைவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட எதுவும்- அது மனிதனேயானாலும்- அதை வேறு பாதையில் மாற்றியமைக்க முடியாது என்பதற்கு சம்பந்தரின் வாழ்வே உதாரணம்.

அத்தகைய சம்பந்தர் சிறு வயதில் தன் தந்தையின் தோள்மீது அமர்ந்து திருத்தலங்களைத் தரிசித்து வரும்போது, திருவட்டத்துறை என்று தற்போது வழங்கிவரும் திருவறத்துறை திருத்தலத்தை தரிசிக்கச் சென்றார். வெள்ளாற்றின் வடகரையில் அமைந் துள்ள இத்தலத்து இறைவன் தீர்த்தபுரீஸ்வரர் என்றும்; அன்னை திரிபுரசுந்தரி என்றும் அழைக்கப் படுகின்றனர். அத்தலத்தை நோக்கி வரும்போது சம்பந்தர் தன் தந்தையின் தோளிலிருந்து கீழிறங்கி நடந்தே வந்தார்.திருவட்டத்துறையை நெருங்குவதற்குமுன் இரவாகி விட்டது. எனவே அத்தலத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள இறையூர் என்னும் தலத்தில் தங்கினார் சம்பந்தர். அப்போது அவருக்கு தாகம் எடுத்தது. உடனே தன் கையிலிருந்த தண்டத்தால் தரையில் தட்டினார். அக்கணமே அவ்விடத்தில் இருந்து நீர் ஊற்றெடுத்தது. அதைக் குடித்து தாகத்தைத் தீர்த்துக்கொண்டார் சம்பந்தர். அவ்வூர் மக்கள் அன்புடன் சம்பந்தருக்கு உணவு படைத்தனர். அதனால் இறையூரில் கோவில் கொண்ட சிவனை தாகம் தீர்த்தபுரீஸ்வரர் என்றும்; அன்னையை அன்னபூரணி என்றும் போற்றி மகிழ்ந்தார் சம்பந்தர்.

 அன்றிரவு திருவட்டத்துறை மக்கள் கனவில் தோன்றிய ஈசன், "எமது அடியார்களின் ஒருவனான ஞானசம்பந்தன் எமைப் பாடும் பொருட்டு இத்தலம் நோக்கி வந்தான். இரவாகிவிட்டதால் இறையூரில் தங்கியுள்ளான். அவனுக்கு முத்துச் சின்னம் கொடுத்து, முத்துக் குடை பிடித்து, முத்துச் சிவிகையிலேற்றி அழைத்து வாருங்கள்' என்று கூறி மறைந்தார்.

காலை எழுந்த அனைவரும் ஆலயத்திற்குச் சென்று பார்க்க, அங்கே கருவறையில் முத்துச் சின்னம், முத்துக் குடை, முத்துச் சிவிகை ஆகியவை இருந்தன.

அதைக் கண்டு அதிசயித்த ஊர் மக்கள், அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு இறையூரை நோக்கிச் சென்றனர்.

இதே செய்தியை இறையூர் மக்கள் கனவிலும் ஈசன் உணர்த்தியிருந்ததால், அவர்களும் காலையில் எழுந்து ஞானசம்பந்தருக்கு மரியாதை செய்து, அவரை அழைத்துக் கொண்டு திருவட்டத்துறை நோக்கி வந்தனர். இரு ஊர் மக்களும் ஓரிடத்தில் கூடினர். (அந்த இடம் கூடலூர் என்று வழங்கப்படுகிறது.) அதன் பின்னர் முத்துச் சிவிகையிலேறி திருவட்டத்துறை சென்று இறைவனைப் பாடி மகிழ்ந்தார் சம்பந்தர்.

""எங்கள் ஊருக்கு மாறன்பாடி என்ற பெயரும் முற்காலத்தில் இருந்துள்ளது. சம்பந்தர் இறையூர் வந்ததும், திருவட்டத்துறை ஈசனைப் பாடியதும் பெரிய புராணத் தில் இடம் பெற்றுள்ளன. எங்கள் ஊரில் சம்பந்தர் தங்கியதன் நினைவாக, இங்குள்ள கோவிலில் சம்பந்தருக்கு தனிச் சந்நிதி அமைந்துள்ளது.இத்தல இறைவனின் திருப்பெயர் தாகம் தீர்த்த புரீஸ்வரர் என்பதால், இவ்வூரில் மட்டுமல்ல; இதைச் சுற்றியுள்ள பல ஊர்களிலும் தண்ணீர்ப் பஞ்சம் வந்ததே இல்லை. அதேபோல அம்பாள் அன்னபூரணி என்பதால் எங்கள் ஊரில் பசி, பஞ்சம் வந்ததில்லை. மேலும் வந்தவரை வாழவைத்துப் பசியாற்றும் பகுதியாக விளங்கி வருகிறது. உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால், இப்பகுதி யில் சர்க்கரை ஆலை, சிமெண்ட் ஆலை போன்றவை அமைந்துள்ளன. அதில் பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்று வாழ்ந்து வருகின்றனர்


 ஓய்வு பெற்ற ஆசிரியரான பெர்னாட்ஷா அவர்களின் முயற்சியால் பணிகள் நடந்து வருகின்றன. பக்தர்களும் இதற்கு உதவி வருகின்றனர்'' என்கிறார்கள் இறையூரைச் சேர்ந்த ராஜவேல், செல்லமுத்து, பாலகிருஷ்ணன் ஆகியோர்.




No comments:

Post a Comment